Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காப்பகத்தில் விடப்பட்ட வளர்ப்பு நாய் உயிரிழப்பு

கோவை, அக்.30: கோவை சரவணம்பட்டி பாத்திமா நகரை சேர்ந்தவர் ஆதர்ஷ் (29). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கடந்த மாதம் 30ம் தேதி ஆதர்ஷ் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்ததால், தனது நாயை சரவணம்பட்டி பகுதியில் உள்ள நாய் காப்பகத்தில் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி காலை காப்பகத்திலிருந்து ஆதர்ஷை போனில் அழைத்துள்ளனர். அவர்கள், ஆதர்ஷி நாய் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காப்பகத்திற்கு சென்றார். தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது நாய் கேட்டின் மீது குதித்து தாண்ட முயன்றபோது, அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பெல்ட் கேட்டில் மாட்டி கழுத்து இறுகி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆதர்ஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் காப்பகத்தின் பொறுப்பாளர் ரேவதி (54) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.