Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மாயம்

கோவை, ஜன. 28: கோவை வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (55). இவர் மகள் ரக்சனா (23). இவருக்கும் தினேஷ் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ரக்சனா கணவரை பிரிந்து தாய் சாந்தி வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 26 ம் தேதி லக்சனா வீட்டிலிருந்து வெளியே சென்றார். அப்போது அவர் கணவர் வீட்டிற்கு சென்று அவருடன் வாழ போவதாக கூறி சென்று உள்ளார். ஆனால், அவர் கணவர் வீடு செல்லாமல் மாயமாகி விட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சாயிபாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து ரக்சனாவை தேடி வருகிறார்கள்.