Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை, செப். 22: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (செவ்வாய்) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறார். கமிஷனர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர்கள் குமரேசன், சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இம்முகாமில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் திருத்தம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மனு அளிக்கலாம். இம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய தீர்வு காணப்படும் என மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.