Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கோவை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் 645 மனுக்கள் குவிந்தன

கோவை, செப். 22: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது.  மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார். இதில், இலவச மனை பட்டா கேட்டு 390 மனுக்கள், வேலை வேண்டிய 9 மனுக்கள், இதர கோரிக்கை தொடர்பாக 246 மனுக்கள் என மொத்தம் 645 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து, அடுத்த 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என மாவட்ட கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார்.

மகளிர் உரிமை தொகை கேட்டு பெண்கள் கூட்டமாக வந்து மனு அளித்தனர். கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்த ஊழியர், தன்னை நிறுவனம் பணிநீக்கம் செய்து விட்டதாக கூறி புகார் மனு அளித்தார். அந்த ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் தரையில் படுத்து உருண்டு, போராட்டம் நடத்தினார். அவரை போலீசார் அப்புறப்படுத்தினர்.