கோவை,செப்.22: கோவை செல்வபுரம் தேவேந்திரன் வீதியைச் சேர்ந்தவர் குப்பம்மாள் (81). இவர் தனது பேரன் தினேஷ்குமாருடன் வசித்து வந்தார். தினேஷ்குமாருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் தினமும் மது போதையில் வந்து அக்கம் பக்கத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனை குப்பம்மாள் கண்டித்தார். ஆனால் அவர் அதனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இதனை நினைத்து குப்பம்மாள், மனவேதனையில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர் விரக்தியடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


