Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை

மேட்டுப்பாளையம், செப்.18:பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி அருகே திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெரியாரை வாழ்த்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து தந்தை பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுவதை ஒட்டி சமூக நீதி நாள் உறுதிமொழியையும் திராவிட கழகத்தினர் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ரங்கசாமி, நகர தலைவர் பழனிச்சாமி, நகர செயலாளர் சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், திமுக தெற்கு நகர செயலாளர் முனுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.