Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது

காரமடை, ஜூலை 18: காரமடையை அடுத்துள்ள பிளிச்சிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (62). இவரது மனைவி சரோஜா (56). விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10 ம் தேதி ரங்கநாதன் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் சரோஜா மட்டும் தனியே இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்துள்ளார். இதனை அறியாத மூதாட்டி அசந்த நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு இளைஞர் தப்பிச்சென்றார்.

சரோஜா, ரங்கநாதன் தம்பதியினர் இதுகுறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரித்து வந்த நிலையில் காரமடையை அடுத்துள்ள கண்டியூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (37) திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.