Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொண்டாமுத்தூர் தமிழ் இலக்கியப்பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா

தொண்டாமுத்தூர், ஜூலை 18: தொண்டாமுத்தூர் தமிழ் இலக்கியப்பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைவர் வெ. பூ. பழனிச்சாமி தலைமையேற்க பேரவை செயலர் தமிழ்ச்செம்மல் அரசு விருதாளர் சுப்பு தர்மன் வரவேற்றார். காமராஜர் உருவப்படத்துக்கு தொண்டாமுத்தூர் பேரூராட்சி துணை தலைவர் மு.ப. நடராஜன் மாலை அணிவித்தார்.

பொருளாளர் சிவசண்முகம் இனிப்பு வழங்கினார். தமிழர் மெய்யியல் ஆய்வாளர் இலட்சிய தென்றல் து.லட்சுமி காந்தன் பேசினார். விழாவில் காமராஜர் குறித்து பேசிய கல்லூரி மற்றும் பள்ளி மாணவருக்கு இலக்கிய பேரவையின் சான்றிதழுடன் பரிசுகளை காமராஜர் பேரவை தலைவர் ஆறுச்சாமி மின்வாரிய ஓய்வு பொறியாளார் கருப்புசாமி ஆகியோர் வழங்கினர்.

பேரவை துணை தலைவரும் ஆசிரியருமான திலகவதி காமராஜர் சதுக்கம் நூல் வெளியிடபட்டது. விழாவில் ஸ்ரீராம் ஆதித்தன், கோவை கிருஷ்ணா, பொன் பூங்கொடி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி சங்க தலைவர் டாக்டர் மா.சிவகுமார், பழனிச்சாமி, ஜெயராமன், வெங்கடாசலம், சுப்பிரமணியம், கவிஞர் சுகுணா, கிருஷ்ணசாமி, ரவீந்திரநாத், கிருஷ்ணசாமி, ஆசிரியர் சாரதா, நிர்மலா தேவி, கலைவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.