கோவை, அக்.17: கோவை சிங்காநல்லூர் அருகில் பிரதம மந்திரியின் சூரிய வீடு மின்சக்தி திட்டத்தின் சிறப்பு முகாம் கோவை நகரிய கோட்டத்தின் சார்பில் நடந்தது. இதில், மேற்பார்வை பொறியாளர் மாநகர் சாந்தநாயகி தலைமை வகித்தார்.
நகரிய செயற்பொறியாளர் விஸ்வலிங்கம் மற்றும் வசந்த முரளி, செயற்பொறியாளர் பொது மாநகர், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், பணியாளர்கள், சோலார் விநியோகஸ்தர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும், சுங்கம் விக்னேஷ் மஹாலிலும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.


