Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கூடலூர் நகராட்சி பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றம்

பெ.நா.பாளையம், அக்.17: கோவை கூடலூர் நகராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெய்த மழையின் காரணமாக, சாமிசெட்டிபாளையம், சாரங்க நகர் பகுதிகளில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இந்த தகவலை அடுத்து கூடலூர் நகராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேங்கிய மழைநீரை நகராட்சி வாகனத்தின் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நகர மன்றத் தலைவர் அறிவரசு வழிகாட்டுதலின்படியும், நகராட்சி ஆணையாளர் கோபிநாத் அறிவுறுத்தலின்படியும், பொதுமக்களின் நலன் கருதி சாலையில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையில், நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.