Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.8 லட்சத்தில் அமரர் ஊர்தி வாகனம் சிறுமுகை பேரூராட்சியிடம் ஒப்படைப்பு

மேட்டுப்பாளையம், அக்.17: சிறுமுகை ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள அமரர் ஊர்தி வாகனம் பேரூராட்சிக்கு சொந்தமான நவீன எரிவாயு மின் மயானத்திற்கு வழங்கும் நிகழ்வு நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் தனசேகர்,தற்போதைய ஆளுநர் பூபதி ஆகியோர் மாவட்ட துணை ஆளுநர் செந்தில்குமார், பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார் முன்னிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் மாலாவிடம் அமரர் ஊர்தி வாகனத்தை ஒப்படைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறுமுகை பேரூராட்சி முன்னாள் தலைவர் உதயகுமார், ரோட்டரி சங்க தலைவர் பிரபு, செயலாளர் தினேஷ், பொருளாளர் மகாலிங்கம், முன்னாள் தலைவர்கள் வேணு சங்கர், அருள்மொழி, பாலாஜி, எழில்வண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் மற்றும் புளியம்பட்டி, பொள்ளாச்சி ரோட்டரி சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.