Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 16: அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில் நேற்று நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜோதிகுமார் தலைமை வகித்தார். இதில் 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது, வழக்கறிஞர் ஜோதிகுமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.

வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஐசியூ வசதி கொண்ட ஆம்புலன்ஸ் வசதியை நீதிமன்ற வளாகத்தில் ஏற்படுத்த வேண்டும். காலியாக உள்ள 300 நீதிமன்ற பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இ-பைலிங் நடைமுறையில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். நீதிமன்ற வளாகத்தில் குடிநீர் வசதி, பார்க்கிங் வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.