Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவை, ஜூலை 16: கோவை டாடாபாத் பகுதியில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள் கூறுகையில்,‘‘காலி மதுபாட்டில் திரும்ப பெறுவதற்கு மாற்று திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே கொண்டு வர வேண்டும்.

நீண்ட காலமாக ஊழியர்களின் பணி வரன்முறை, கால முறை ஊதியம், இஎஸ்ஐ மற்றும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. என்றனர். பின்னர், மாலையில் உண்ணாவிரத போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது.