சூலூர், நவ.15: கோவை மாவட்டம் சூலூர் அருகே நடுப்பாளையம் பகுதியில் தனியார் ஒருவர் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குறிப்பிட்ட அந்த வீட்டுக்கு சென்ற போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர்.
அங்கு இருந்த ஒரு சாக்குப்பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 74 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து அங்கிருந்த இருகூரை சேர்ந்த ரவி (55) என்பவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
