கோவை, அக். 14: கோவை குனியமுத்தூர் மின்பகிர்மான வட்டம் செயற்பொறியாளர் சம்பத் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக சோலார் மின்சாரம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு முகாம் நாளை (15-ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை போத்தனூரில் உள்ள பிவிஜி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமில் சோலார் அமைப்பது, பதிவு செய்வது, வங்கி கடன் பெறுவது, அரசுத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பெறுவது தொடர்பான பொது மக்களின் சந்தேங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். எனவே இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


