Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கார் மோதி முதியவர் பலி

கோவை,அக்.14:கோவை மதுக்கரை மரப்பாலம் ராஜேஷ்வரி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(61). இவர் கடந்த 11ம் தேதி பாலக்காடு மெயின் ரோடு சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணகுமார் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து (மேற்கு) பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.