Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மயங்கி விழுந்து வாலிபர் சாவு

கோவை, செப். 11: கோவை மருதமலை அடிவாரம் மகாத்மா காந்தி ஹவுசிங் யூனிட் தொழுநோய் காலனியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (33). கூலித் தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. கடந்த 8ம் தேதி மதியம் ரங்கராஜன் அதிகளவில் மது அருந்திவிட்டு தன் வீட்டின் அருகே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

மாலை ரங்கராஜனின் மனைவி சுமதி (30) மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பினார். அப்போது, ரங்கராஜன் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ரங்கராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.