கோவை, செப். 11: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், உத்தரவின்பேரில், மாநகரில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 9ம் தேதி (நேற்று) வரையிலான காலக்கட்டத்தில் தீவிர குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ரவுடிகள் 54 பேர் மீதும், மருந்து சரக்கு குற்றவாளிகள் 44 பேர் மீதும், கள்ளச் சந்தைக்காரர்கள் 8 பேர் மீதும், பாலியல் குற்றவாளிகள் 7 பேர் மீதும், சைபர் கிரைம் குற்றவாளிகள் 4 பேர் மீதும் என 117 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


