Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, அக். 10: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் நாடு முழுவதும் தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனைக்கண்டித்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் (கோவை மாவட்டம்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்தும், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலக வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதில், 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.