கோவை, அக். 10: தமிழ்நாடு அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கம் சார்பில் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியில் தினக்கூலி பணியாளர்களான தூய்மைப்பணியாளர்கள், டி.பி.சி. மலேரியா பணியாளர், குடிநீர் விநியோக பணியாளர்,
டிரைவர், கிளீனர், ஆர்.ஆர்.சிறப்பு பணியாளர் உள்ளிட்ட தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் 8.33 சதவீதம் போனஸ் தொகை வழங்காமல், சொற்ப தொகை வழங்கப்பட்டு வருவது சட்டத்திற்கு எதிரானது. எனவே இந்த தொழிலாளர்களுக்கு நடப்பாண்டிற்கு 8.33 தீபாவளி போனஸ், முன்பணம் ரூ. 10 ஆயிரம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


