கோவை, : கோயம்புத்தூர் கோதே-சென்ட்ரம் மற்றும் சென்னை டாட் தகவல் மையம் ஆகியவை இணைந்து நடத்தும் ஜெர்மனியில் கல்வி மற்றும் ஆராய்ச்சி குறித்த இலவச கருத்தரங்கம் இன்று (8-ம் தேதி) மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அவினாசி சாலையில் உள்ள ஜி.டி அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இதில், ஜெர்மனியில் முதுகலை படிப்புக்கு உண்டான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, ஜெர்மனியில் ஆராய்ச்சி வாய்ப்புகள், ஜெர்மனியில் இருந்து வருகை தரும் டாட் இளம் தூதர்களின் அனுபவ பகிர்வு, ஜெர்மானிய மொழி, கலாச்சாரம் மற்றும் குடியேற்றம் குறித்த தகவல்கள், கலந்துரையாடல் மற்றும் கேள்வி-பதில் பகுதி, குலுக்கல் முறை பரிசுத்தேர்வு ஆகியவை இடம்பெறுகிறது. இந்த கருத்தரங்கு வெளிநாட்டில் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.


