கோவை, : கோவை மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் நடவடிக்கை பணிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும் சுகாதாரமற்ற பகுதிகளை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது.
கோவை மாநகரில் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு 68-ல் சேட் நாராயணன் வீதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டிடத்தில் மாநகராட்சி சுகாதாரக்குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அந்த கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாநகராட்சி சுகாதாரக்குழுவினர் கட்டிட உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


