Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கோவையில் 429.40 மி.மீ மழை பதிவு

கோவை, அக். 8: கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோல், நேற்று முன்தினம் நகரில் காந்திபுரம், உக்கடம், போத்தனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  அதன்படி, நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) விவரம்: பெரியநாயக்கன்பாளையம் - 43, மேட்டுப்பாளையம் - 45, பில்லூர் டேம் - 116,

அன்னூர் - 40, கோவை தெற்கு தாலுகா - 1, தொண்டாமுத்தூர் - 2, சிறுவாணி அடிவாரம் - 83, மதுக்கரை தாலுகா - 7, போத்தனூர் ரயில் நிலையம் - 0.20, பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் - 15, மாக்கினாம்பட்டி - 4, கிணத்துக்கடவு - 6.20, ஆனைமலை - 9, ஆழியார் - 1, சின்கோனா - 3, சின்னகல்லார் - 19, வால்பாறை பிஏபி - 2, வால்பாறை தாலுகா - 2, சோலையார் - 31 மி.மீ என கோவை மாவட்டத்தில் 429.40 மி.மீ மழையும், சராசரியாக 18.67 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.