கோவை,செப்.9: கோவை சிங்காநல்லூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, இருகூர் சுந்தராம்பாள் கோயில் அருகே நின்றிருந்த 2 பேரை பிடித்து சந்தேகத்தில் விசாரித்தனர். அதில், அவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பதுக்கி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் அம்மன்குளத்தை சேர்ந்த நவீன்(28), வெள்ளலூரை சேர்ந்த சுபாஷ்(30) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 280 போதை மாத்திரை மற்றும் 1.250 கி.கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


