மதுக்கரை, செப்.9: கோவை சுந்தராபுரம் பதிவாளர் காலனியில் உள்ள கருப்பராயன் மற்றும் ஸ்ரீ கோகுல் கண்ணன் திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அபிஷேக பூஜை, குழந்தை கிருஷ்ணன் பகவானை தொட்டிலில் வைத்து வழிபடுதல், கிருஷ்ணர் வேடம் அணிந்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பூஜை செய்தல், கோமாதா பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்.பி டவர் உரிமையாளர், அன்னதான, ஆன்மிக செம்மல் எஸ்.கே.பூபதி யாதவ்வை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
+
Advertisement


