Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கோவை 10 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை,செப்.9: கோவை கரும்புக்கடை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி சென்றனர். அப்போது புட்டுவிக்கி ரோட்டில் உள்ள ஜலகண்டேஸ்வரன் கோயில் அருகே உள்ள காலி இடத்தில் நின்றிருந்த 3 பேரை சந்தேகத்தில் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். சோதனையில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த முபீனா(47), காந்திபுரத்தை சேர்ந்த ஷாகுல் ஹமீத்(46) மற்றும் ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த முகமத் ஜியாவுதீன்(24) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா, 1 டூ-வீலர், 4 செல்போன்கள் மற்றும் ரூ.19,500 பறிமுதல் செய்யப்பட்டது.