கோவை, மே 6: கோவை மாவட்டத்தில் 11,674 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் தவெக 6 தொகுதிகளையும், திமுக 3 தொகுதி, அதிமுக ஒரு தொகுதியை கைப்பற்றியது. கோவை அதிமுக கோட்டை என்பதை தகர்த்து கோவை தெற்கு, வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளை திமுக பெற்றது. இதற்கிடையே கோவை மாவட்டத்தில் மொத்தம் 11,674 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என 17நோட்டாவுக்கு செலுத்திய வாக்கு விவரம்: கோவை தெற்கு - 759, கோவை வடக்கு - 1020, கிணத்துக்கடவு - 1717, சிங்காநல்லூர் - 1346, சூலூர் - 1353, கவுண்டம்பாளையம் - 2116, மேட்டுப்பாளையம் - 839, தொண்டாமுத்தூர் - 1000, பொள்ளாச்சி - 849, வால்பாறை - 675 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் அதிக நோட்டா ஓட்டுகள் பெற்ற தொகுதியாக உள்ளது.



