Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கடும் குளிருக்கு கம்பளிகள் தயார் கோவை மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு

கோவை, ஜன. 6: கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 600க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. மேலும் 1,200க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. கடந்த மாதம் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விடுமுறை முடிந்து மாநிலம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி முன்கூட்டியே பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதற்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மாணவர்கள் நேற்று காலை உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நண்பர்களை கண்டு மகிழ்ச்சி அடைந்து, கட்டித்தழுவி கொண்டனர். சில மாணவர்கள் 1 மணி நேரத்துக்கு முன்பே ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர்.