Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

கோவை, மே 5: தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு தனி இலாகா அமைக்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக கிணத்துக்கடவு தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் விக்னேஷ் பேட்டி அளித்தார்.  கோவை ஜிசிடி வாக்கு எண்ணும் மையத்தில் தவெக வெற்றி வேட்பாளர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தவெக தலைவர் விஜய் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேட்பாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் ஊழலற்ற நிர்வாகம் நடத்துவேன் என உறுதி அளித்தார். மேலும் தேர்தலில் வெற்றிபெற்றால் யாரும் ஒரு ரூபாய் கூட மக்கள் பணத்தை எடுக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளார். ஒரு திட்டத்துக்கு ஒதுக்கும் தொகையில் 30 சதவீதம் அரசியல் வாதிகளும், 10 சதவீதம் அரசு அதிகாரிகளும், 10 சதவீதம் ஒப்பந்ததாரர்களும் எடுப்பதால்தான் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது.

யாரும் ஊழல் செய்யமாட்டோம் என உறுதி அளித்து விட்டு வந்துள்ளோம். பெண்கள் பாதுகாப்புக்கு 200 சதவீதம் முக்கியத்துவம் அளிக்கவும், அதற்கு தனி இலாகா அமைக்கப்படும் எனவும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மிகவும் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு இருக்கும். இவ்வாறு விக்னேஷ் கூறினார்.