Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கோவையில் அதிமுக கோட்டை தகர்ந்தது 10-ல் ஒன்றில் மட்டுமே அதிமுக வெற்றி; வானதி சீனிவாசன் 3-வது இடம்

கோவை, மே. 5: கோவை மாவட்டம் அதிமுக கோட்டை என கூறி வந்த நிலையில், அந்த கோட்டை நடந்து முடிந்த தேர்தலில் முழுவதுமாக தகர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவை மற்றும் அவிநாசி என 11 தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்.

இதில், கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் 9 தொகுதியிலும், கூட்டணி கட்சியான பாஜவிற்கு கோவை வடக்கு தொகுதியும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோவையில் எஸ்.பி.வேலுமணி போட்டியிட்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி தவிர, அதிமுக மற்றும் பாஜ போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதில், கோவை வடக்கில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இதுதவிர, மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், வால்பாறை, கிணத்துக்கடவு உள்பட 5 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக 3-வது இடத்தையும், கவுண்டம்பாளையம், சூலூர், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர, கடந்த சட்டமன்ற தேர்தலில் எஸ்.பி.வேலுமணி 41,709 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.