Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

வால்பாறை தொகுதியில் திமுக வெற்றி

கோவை, மே 5: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வால்பாறை தனி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் 1,49,260 ஓட்டுகள் மற்றும் 1,171 தபால் வாக்குகள் என மொத்தம் 1,50,431 ஓட்டுகள் பதிவானது. இதில் திமுக வேட்பாளர் குட்டி (எ) சுதாகர் 54,671 ஓட்டுகள் பெற்று, 9,371 ஓட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.

மற்ற வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம்: அதிமுக லட்சுமண சிங் - 43,728, தவெக ஸ்ரீதரன் - 45,300, நாதக உமாதேவி - 5256 ஓட்டுகள் பெற்றனர். சுயேட்சை வேட்பாளர்கள் பெருமாள் - 479, லட்சுமி - 322 ஓட்டுகள் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 675 பேர் வாக்கு செலுத்தி உள்ளனர்.