Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

தொழிலாளிக்கு கத்தி குத்து: வாலிபர்கள் 3 பேர் கைது

கோவை, பிப். 5: கோவை கணபதி காந்திமாநகரை சேர்ந்தவர் உன்னி மதுசூதனன் (30). தொழிலாளி. இவர் சரவணம்பட்டி வஉசி நகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய 3 வாலிபர்கள் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் உன்னி மதுசூதனன் அவர்களை கண்டித்து அங்கிருந்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உன்னி மதுசூதனனை குத்தினர்.

பலத்த காயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த 3 வாலிபர்களும், அவரை மிரட்டி தப்பி சென்றனர். பின்னர் உன்னி மதுசூதனனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து உன்னி மதுசூதனன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், உன்னி மதுசூதனனை கத்தியால் குத்தியது கோவை காந்திபுரம் சாஸ்திரி நகரை சேர்ந்த சாம் லியோன் (19), சதீஷ்குமார் (29), ரத்தினபுரியை சேர்ந்த மணிகண்டன் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

kovai_050226_2