Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கிணத்துக்கடவில் புழுதி பறக்கும் சாலையால் தவிக்கும் பொது மக்கள்

கிணத்துக்கடவு, மே 1: கோவை,பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில்,கிணத்துக்கடவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் அருகில் இருந்து,பொள்ளாச்சியில் இருந்து கோவை மார்க்கமாக வரும் வாகனங்கள் கிணத்துக்கடவுக்கு வந்து செல்லும் வகையில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் ரோடு பல இடங்களில் பழுதடைந்து இருப்பதால் வாகன ஓட்டியில் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், சர்வீஸ் ரோட்டை புதுப்பிப்பதற்காக,கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா நகர் வரை உள்ள சர்வீஸ் ரோட்டில் இருந்த தார்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. தாரை தோண்டி எடுத்து 4 நாட்களாகியும், தார் போட்டு,புதுப்பிக்ககாததால், அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது, புழுதி பறக்கிறது, இதனால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி,பொதுமக்களும் பாதித்து வருகின்றனர். எனவே, தோண்டிய இடத்தில், உடனடியாக தார் போட்டு, புதுப்பிக்க வேண்டும் என்று,பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.