பெருந்துறை, ஆக.29: பெருந்துறை பஸ் நிலையம் அருகில் சாலையோரம் நிற்கும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பெருந்துறை புதிய பஸ் நிலையம் அருகில் சோழீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் கடைகள் உள்ளதால் நடைபாதை வழியே யாரும் நடந்து செல்ல முடியாது. அதனால் கீழே இறங்கி சாலையில் தான் செல்ல முடியும்.
பெருந்துறை பஸ் நிலையத்தில் இருந்து பவானி செல்லும் முக்கிய சாலையாக இந்த சாலை திகழ்ந்து வருகிறது. அதனால் எந்த நேரமும் இந்த சாலை வழியாக வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.




