Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தாளவாடி அருகே சாலையில் கம்பீரமாக வாக்கிங் சென்ற காட்டு யானை: வாகன ஓட்டிகள், பயணிகள் அச்சம்

சத்தியமங்கலம், ஆக.29: தாளவாடி அருகே சாலையில் காட்டு யானை கம்பீரமாக வாக்கிங் வந்தது. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று காலை தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை தாளவாடி- தலமலை சாலையில் மகாராஜன்புரம் அருகே சாலையில் உலா வந்தது. காட்டு யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சாலையில் ஹாயாக நடந்து வந்த காட்டு யானை திடீரென வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யானை நடமாட்டத்தை அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்தனர்.