Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சீரநாயக்கன்பாளையத்தில் பல மாதங்களாக சாலையில் ஓடும் சாக்கடை நீரால் தோற்று நோய் அபாயம்

கோவை,ஜூலை28: சீரநாயக்கன்பாளையத்தில் பல மாதங்களாக சாலையில் ஓடும் சாக்கடை நீரால் தோற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என தெரிவித்தனர். கோவை சீரநாயக்கன்பாளையத்தில் விவேகானந்தர் வீதி உள்ளது. இந்த வீதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும், இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் பாதசாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், சாக்கடை நீர் சாலையில் ஓடுவதால் கடுமையான தூர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பல மாதங்களாக சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுகிறது. பெயரளவில் வந்து சுத்தம் செய்து செல்கின்றனர். சாக்கடையில் இருந்து எடுக்கப்படும் மண்,சாக்கடையின் ஓரத்தில் கொட்டப்படுகிறது. அது மீண்டும் சாக்கடையில் தான் செல்கிறது. அதேபோல சாக்கடையில் அதிகளவில் மண், சில நாட்கள் முன் சாலை அமைக்கப்பட்ட காண்கிரீட் நிறைந்து உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்கும்போது அனைத்து வீட்டு வாசல் படிகளையும் இடித்து அகற்றினால் தான் சாக்கடை மண் எடுக்க முடியும் என மிரட்டும் தோனியில் பேசுகின்றனர். இதற்கு நிரந்திர தீர்வு காண உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.