Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அனைத்து துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு

கோவை, ஜூன் 25: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர், வருவாய் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் விரைவில் நடக்கவுள்ளது. முதல்வர் தலைமையில் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் நடந்த பணிகள், நிலுவையில் உள்ள பணிகள், துவக்க வேண்டிய பணிகள், மக்கள் சேவை திட்டங்களில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள், குறிப்பாக சிஎம் செல் புகார் மனுக்கள், இதர மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவில் அனைத்து துறைகளின் தகவல்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது.

இதில் வருவாய்த்துறையினர் பொதுமக்களின் விண்ணப்ப மனுக்களை அதிகளவு கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக தெரிகிறது. குறிப்பாக மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணாமல் அதில் குறை கண்டறிந்து கால தாமதம் செய்யும் வகையிலான பணிகளை தொடர்ந்து செய்வதாக தெரிகிறது. சரியான விண்ணப்ப மனுக்களுக்கு தீர்வு காணாமல் காலம் கடத்துவது லஞ்சம் பெறும் நோக்கமாக இருப்பதாக மக்கள் புலம்பி வருகின்றனர். திட்ட பணிகள், டெண்டர் ஒதுக்கீட்டில் சரியான நடைமுறை கொண்டு வரப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் முறைகேடு, விதிமுறை மீறல்களை தடுக்காமல் உயர் அதிகாரிகள் இருப்பதால், தவறுகள் தொடர்கிறது. மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளின் அலட்சிய செயல்பாடுகளை விசாரித்து ஆய்வு கூட்டத்திற்கு செல்லும் முன் கலெக்டர் அதிரடி காட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்