Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விடுதியில் கேரள இளம்பெண் தற்கொலை

கோவை,ஜூன்23:கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அஜயன் மகள் அஞ்சுஷா (21).இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதற்காக காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து அறை தோழிகள் விடுதி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அஞ்சுஷா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது, அஞ்சுஷா ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.