Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கன்னியாகுமரி பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில்: மீண்டும் போத்தனூர் சந்திப்பில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுக்கரை, ஆக.17: போத்தனூர் சந்திப்பில், கன்னியாகுமரி பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது தொடர்பாக, ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினரும், போத்தனூர் ரயில் பயனாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான சுப்ரமணியன், சேலம் ரயில்வே மண்டல மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:கன்னியாகுமரி பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ், வண்டி எண் 16525/16526 ரயில், பல தசாப்தங்களாக போத்தனூர் சந்திப்பில் நின்று சென்றது. இதனால், போத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வே நிர்வாகம், போத்தனூர் சந்திப்பில் இருந்த இந்த நிறுத்தத்தை நீக்கியது. ரயில் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டதால், போத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள், மாணவர்கள், பணியாளர்கள், வணிகர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.