கோவை, ஆக.17: திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணினி அறிவியல் பட்டதாரியான அருண் (25) என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூரில் தங்கி வேலை தேடி வந்தார். கடந்த 12ம் தேதி கோவையில் நடைபெற்ற வேலைக்கான நேர்காணலில் பங்கேற்க வந்தார். அதற்கு பின்னர் அவர் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பைன்ட் மை டிவைஸ் செயலி மூலம் அவரது மொபைல் இருப்பிடத்தைக் கண்காணித்தபோது, வடவள்ளி கணுவாய் வன பகுதியில் இருப்பது தெரியவந்தது.
+
Advertisement



