கோவை, அக். 12: கோவையில் நள்ளிரவில் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் குறித்து போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.திருச்சி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே கட்டிடம் ஒன்றின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கட்டிடத்தின் முன்பு இரும்பு பொருட்கள், பைப் உள்ளிட்ட தளவாட பொருட்கள் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் நைசாக அங்கிருந்த கட்டுமான பொருட்களை ஒவ்வொன்றாக திருடி சென்றனர்.
இந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன்அடிப்படையில், திருட்டு கும்பலை ராமநாதபுரம் போலீசார் தேடி வருகின்றனர். கோவையில் திருட்டு சம்பவங்களை ஒழிக்க நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் போலீசார் ரோந்து பணி அதிகரிக்க வேண்டும் எனவும், இரவில் சுற்றித்திரியும் மர்ம நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


