கோவை, அக். 12: கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் மீனாட்சி அம்மன் தெருவை சேர்ந்தவர் கலைவாணி (34). டெய்லர். இவர் கடந்த 9ம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் எஸ்ஐஎச்எஸ் காலனி மகாத்மா காந்தி ரோட்டில் சென்றபோது பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் நகையை பறிக்க விடாமல் கைகளால் தடுத்தார். இதில், ஒரு கிராம் தங்க தாலி மர்ம ஆசாமியின் கையில் சிக்கியது. நகையுடன் இருவரும் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து கலைவாணி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பெண்ணிடம் நகை பறித்தவர்களை தேடி வருகின்றனர்.
+
Advertisement


