கோவை, டிச. 10: கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை அறிய டிஜிபிஎஸ் சர்வே பணிகள் துவக்கப்படவுள்ளது. முதற்காக மேப்பிங் பணிகள் துவக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 693 சதுர கி.மீ பரப்பில் வனம் அமைந்திருக்கிறது. இதில் யானைகளின் இடப்பெயர்ச்சி அதிகமாக இருக்கிறது. கேரள மாநிலத்திலிருந்து கோவை வனத்திற்கு யானைகள் அதிகமாக வந்து செல்கின்றன. வன எல்லையில் ஆன்மிக தலங்கள், சுற்றுலா மையங்கள், கல்வி, பொழுதுபோக்கு நிறுவனங்கள் இருக்கிறது. அதிக கட்டடங்களின் யானைகளின் வலசை பாதை (காரிடார்) முடங்கி போய் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்வே பிரிவின் மூலமாக யானை வழித்தடங்களை சர்வே செய்ய உத்தரவிடப்பட்டது.
+
Advertisement


