Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கஞ்சா விற்றவர் கைது

சென்னிமலை, ஆக.10: சென்னிமலை காங்கயம் ரோட்டில் உள்ள கணுவாய் பகுதியில் நேற்று மாலை சென்னிமலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக பைக்கில் ஒருவர் வந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்றது தெரியவந்தது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் சிங் (39) என்ற அவர் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நாட்டார்பாளையத்தில் தங்கியிருந்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். ராஜ்குமார் சிங்கிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1.200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ராஜ்குமார் சிங் மீது ஏற்கனவே சென்னிமலை மற்றும் பெருந்துறை போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.