Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஒன்றிய பா.ஜ., அரசின் நாடாளுமன்ற தொகுதி மறுவரையை கண்டித்து கோவையில் காங். அமைதி ஊர்வலம்

கோவை, ஆக. 10: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஒன்றிய பா.ஜ., அரசின் நாடாளுமன்ற தொகுதி மறுவரையை கண்டித்து கோவையில் நேற்று அமைதி ஊர்வலம் நடந்தது. பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி கடை மைதானத்தில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலம், காந்திமன்றத்தில் நிறைவுபெற்றது.  கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதையொட்டி, கருப்பு பலூன்கள் உடைக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதகம் பற்றி விளக்கப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன், மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.மகேஷ்குமார், மாநில செயலாளர் கே.செல்வராஜ், கவுன்சிலர்கள் சங்கர், நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.