Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஜவுளிக்கடை பூட்டை உடைத்து திருட முயற்சி

கோவை,ஜூலை10: கோவை காந்திபுரத்தில் ஜவுளிக்கடை பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த வழக்கில் வெள்ளி கொள்ளையில் கைதான 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காந்திபுரம், கிராஸ் கட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கரண் (25). இவர், அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கரண் தொழில் விஷயமாக மும்பைக்கு சென்றிருந்தார். அவர் மும்பை சென்றிருந்த சமயத்தில், கடந்த ஏப்ரல் 5ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் இவரது ஜவுளிக்கடையின் பின் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருட முயன்றுள்ளனர். ஆனால், கடையில் பணம் இல்லாததால் கொள்ளையர்கள் எதுவும் எடுக்காமல் சென்றனர். இதற்கிடையில், மும்பையிலிருந்து கோவை திரும்பிய கரண், கடந்த 8ம் தேதி அன்று தனது கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கரண் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.