கோவை, செப்.8: கோவை மாநகராட்சியில் வருகிற 11ம் தேதி மாமன்ற சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் வருகிற 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேயர் ரங்கநாயகி தலைமையில், மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது கூறப்பட்டுள்ளது.
+
Advertisement


