Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை, செப்.8: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இஎஸ்ஐ ெதாகையை திரும்ப வழங்க கோரி பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் இஎஸ்ஐ சட்ட மீறல் மற்றும் தொழிலாளர் விரோத போக்கு நடைபெறுவதாக கூறி, அதனை கண்டித்து பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்த போராட்டத்தில், தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய முறையில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். அவர்கள், பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி பதிவாளர் அறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.