Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேலந்தாவளத்தில் மொபட்டில் வந்தவரிடம் ரூ.30 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

பாலக்காடு, ஆக. 8: கோவை அருகே உள்ள வேலாந்தாவளத்தில் மொபட்டில் வந்தவரிடம் ரூ.30 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் அருகே உள்ள தரக்களத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவர், நேற்று கோவையில் இருந்து வேலந்தாவளம் வழியாக சித்தூருக்கு மொபட்டில் புறப்பட்டார். வேலந்தாவளம் சோதனைச்சாவடியில் வந்தபோது அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள், மொபட்டை சோதனை செய்தனர்.

அதில் உரிய ஆவணங்கள் இன்றி 500 ரூபாய் நோட்டுக்கள் கத்தை கத்தையாக ரூ.30 லட்சம் இருந்தது. பணம் குறித்து மணிகண்டனிடம் கேட்டபோது கடந்த சட்டமன்ற தேர்தலில் சித்தூர் தொகுதியில் பாஜ கட்சி சார்பில் போட்டியிட்ட பிராணேஷ் ராஜேந்திரன் என்பவரின் ரியல் எஸ்டேட் சம்பந்தமான பணம் என கூறினார். உரிய ஆவணங்களை காட்டுமாறு கேட்டனர். ஆனால் ஆவணங்கள் எதுவும் மணிகண்டனால் காட்ட முடியவில்லை. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் ஹவாலா பணம் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர். மணிகண்டனிடம் கலால் துறை இன்ஸ்பெக்டர் பிரசணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.