Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சிவாஜி காலனியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை, ஆக.8: கோவை மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை, சிஎஸ்ஐடிஏ., தூய மீட்பர் ஆலயம், பெதஸ்தா மருத்துவமனை மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து சிவாஜி காலனி சவுடம்பிகா நகர் முதல் தெரு பகுதியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றனர். நாளை காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கண்புரை நோய், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், மாறுக்கண், சீழ்வடிதல், தூரப்பார்வை ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

இதுகுறித்து அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை நிறுவனத் தலைவரும், சமூக சேவகருமான வக்கீல் புஷ்பானந்தம் கூறியதாவது: முகாமிற்கு வருபவர்கள் தெளிவான வீட்டு முகவரியும், தொலை பேசி எண்ணையும் எழுதிக் கொண்டு வரவேண்டும். கண்புரை நோயாளிகள் மதியம் 1 மணிக்கு கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். கண்புரை உள்ள நோயாளிகள் தங்களுடைய ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஜெராக்ஸ் ஏதேனும் ஒன்றை கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.